நீ ரத்தினங்களின் சிற்றணிக்கோவை!
நீலக் கண்களும்,
மாணிக்க இதழ்களும்..
முத்து பற்களும்
புஷ்பராக விரல்களும்...
நீ ரத்தினங்களின் சிற்றணிக்கோவை!
நீ திங்கள் துண்டம்
பாவைச் சூரியன்...
என் இரண்டாம் உயிர்வளி ஆதலால்
என் உய்விற்க்கு இணைக்காரணி...
என் வாழ்க்கை வளவரையின்
தொலைத் தொடுகோடு!
Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts
Monday, December 6, 2010
Wednesday, February 3, 2010
நிறையாத கோப்பை!
அமாவாசை நாளின்
இரண்டான் ஜாமத்தில்
இணய மறுக்கும் இமைகள்!
நீர்த்துப்போன உரைகற்களின் ஊடே
சிதறிக் கிடக்கும் ஒளிக் கூறுகளால்
சித்திரச் சுவராகிறது என் சாளரம்!
நிஸப்தத்தைக் கிழித்துக்கொண்டு
உனக்கும் எனக்குமான
தூரத்தைத் தின்றபடி
விரைந்து கொண்டிருக்கிறது
ஒரு பறவை!
வாசிப்பின் ஸ்வாரஸ்யத்தில்
எழுத மறந்துவிட்ட,
ரசனையின் விஸ்தரிப்பில்
விமர்சிக்கத் தவறிவிட்ட
யாருக்கும் தெரியாத
ரகசிய வாசகன்
நான்!!!
நீயென்ற ஒற்றைக் கிளையில்
விரும்பி மாட்டிக்கொண்ட,
மனக் குரங்கு
வேண்டி அழுவது
வீடா? விடுதலையா?
ஆடுகளத்தில் நீயே
எதிரியும் பந்தயமுமாய் இருக்க - எப்படி
ஒன்றை வெறுத்து மற்றொன்றை நேசிக்க?
நீயென்னை நிராகரிக்கும் பொழுதுகளில்
எனக்கு ஏன் தேவை இல்லாமல்,
கடவுள் மேல் கோபம் வருகிறது?
இரண்டான் ஜாமத்தில்
இணய மறுக்கும் இமைகள்!
நீர்த்துப்போன உரைகற்களின் ஊடே
சிதறிக் கிடக்கும் ஒளிக் கூறுகளால்
சித்திரச் சுவராகிறது என் சாளரம்!
நிஸப்தத்தைக் கிழித்துக்கொண்டு
உனக்கும் எனக்குமான
தூரத்தைத் தின்றபடி
விரைந்து கொண்டிருக்கிறது
ஒரு பறவை!
வாசிப்பின் ஸ்வாரஸ்யத்தில்
எழுத மறந்துவிட்ட,
ரசனையின் விஸ்தரிப்பில்
விமர்சிக்கத் தவறிவிட்ட
யாருக்கும் தெரியாத
ரகசிய வாசகன்
நான்!!!
நீயென்ற ஒற்றைக் கிளையில்
விரும்பி மாட்டிக்கொண்ட,
மனக் குரங்கு
வேண்டி அழுவது
வீடா? விடுதலையா?
ஆடுகளத்தில் நீயே
எதிரியும் பந்தயமுமாய் இருக்க - எப்படி
ஒன்றை வெறுத்து மற்றொன்றை நேசிக்க?
நீயென்னை நிராகரிக்கும் பொழுதுகளில்
எனக்கு ஏன் தேவை இல்லாமல்,
கடவுள் மேல் கோபம் வருகிறது?
Subscribe to:
Posts (Atom)