நினைவலைகள்1
இன்று ஒருத் தகவலில் தொடங்கும் காலைப்பொழுதில், மென்மையாகக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார் தென்கச்சி சுவாமினாதன். வரது ரிக்ஷா மணி அடித்து பாதிக் கதையில் என்னை அபகரித்து பள்ளி நோக்கி ப்ரயாணப் படுகிறது. பெரும்பாலும் பக்கத்து வகுப்போடு வளைகூடா போர் நிகழ்த்தி வெற்றிக் கொள்வதில் கழிகிறது என் நாள். வீடு திரும்பும்பொழுது குறுக்குப் பாதைகளில் ஜவுட்டாளி முற்கள் கிழிக்க ஓடி ரிக்ஷாவைத் துரத்திப் பிடிக்கையில் ஆடிட்டர் மகள் சங்கீதா ஆச்சர்யத்துடன் சிந்தும் புன்னகையில் நிறம்பி வழிகிறது என் வீர நெஞ்சம்.
முதன்முதலில் தொலைக்காட்சியில் ரஸித்த பெண் மெட்ரோ ப்ரியா. கைகளை வளைத்து பாடல் வரிஸைகளை அழகாய்த் தொகுத்து வழங்கும் அவளை விஞ்சிவிட இன்று வரை ஒரு தொகுப்பாளினி கூட தமிழகத்திற்கு கிட்டாமல் போனது வருந்தத்தக்க ஒன்று. ரங்கோலி ராமாயணம் ஜங்கிள் புக் என கரையும் ஞாயிறுகளில் தூர்தர்ஷன் மாநில ஒளிபரப்புத் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்க சென்னைத் தொலைக்காட்சி மைய்யம் அடிக்கடி தடங்கலுக்கு வருந்திப் பொருமையை சோதிக்கிறது.
ஒருசில மாதத் தேர்வுகளில் அனுப்ரியா ஓரிரு மதிப்பெண்களில் முதலிடத்தைத் தட்டிச் செல்கிறாள். அவள் மீது கடும்கோபமும் தீராப்பகையும் கொண்டிருந்தாலும், பெரும் மரியாதையும், அதீத பயமும் உடன் ஒடுகிறதே! "மதி"ப்பெண் மதிப்பெண் பெருவது விந்தையல்லவே! "மதி" என்றால் சந்திரன் என்று அப்பா சொல்லிக் கொடுத்தது பத்து வயதில் தான். ஆக இவ்விடத்தில் அறிவு என்றே பொருள் கொள்க. :-)
தொடர்வேன்...!
Monday, April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
good one da!
Post a Comment