Wednesday, January 6, 2010

My way of life....!

ஒன்பது பத்து வயதிருக்கும் எனக்கு... நித்தினோடு அவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன்...அவன் பிறந்த நாளைக்கு அவன் புதிதாய் வாங்கியிருந்த Chuckles ஓடு சேர்த்து கிட்டத்தட்ட அவனிடம் GIJOE பொம்மைகள் அனைத்துமே இருந்தன. பெரிய Tankerகள், விமானங்கள் எல்லாம் பார்த்து ஆனந்தத்திலும் ஆச்சர்யத்திலும் நான் அந்த பொம்மைகளுக்கான கதைகளை யோசித்துக் கொண்டிருந்தேன்.

நித்தினுடையப் பாட்டி மிகுந்த அன்பு கொண்டவர்கள். என்னை ஆதரித்து விளையாட அனுமதித்தார்கள். அவனின் அப்பா அம்மா கூட மிகுந்த அன்பு கொண்டவர்கள். நான் அடிக்கடி அவன் வீட்டிற்க்குச் சென்றேன். கதைகள் சொல்வேன். அது முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்காலம்.

நித்தின் என்ன நினைத்தானெனத் தெரியவில்லை. திடீரென சில பொம்மைகளை உள்ளே வைத்து மறைத்துக் கொண்டான். சிறிது நேரம் கழித்து பாட்டி என்னை வீட்டிற்க்கு சென்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மாலையில் வரச்சொன்னார்கள். பொம்மைகளின் மீதிருந்தக் காதலும், என்னுடைய முட்டாள் தனமும் சேர்ந்துக் கொண்டு என்னை அங்கிருந்து வீடு திரும்புவதை தடுத்தது.

"நித்தின் சாப்பிட்டு தூங்கணும் கண்ணா. சொன்னாக் கேளு"
"இல்லப் பாட்டி நான் wait பண்றேன்"
"அம்மா கிட்ட சொல்லி உனக்கு இதே மதிரி ஒரு பொம்மை வாங்கித் தர சொல்றேன்.. இப்பொ சமர்த்தாய் வீட்டுக்கு போ!"
பாட்டி சாதாரணமாகத் தான் சொன்னார்கள். எனக்கு அப்பொழுது தான் என்னமோ போல் இருந்தது. இல்லாமையயை முதல் முறை உணர்வு பூர்வமாக அனுபவித்தத் தருணமாக அது இருந்திருக்கக் கூடும். GIJOE Full set Rs. 2500. அப்பாவை கேக்கலாம்.

எங்கள் வீட்டுக் கூரை மழை நாளில் எங்களுக்கு அவ்வப்போது அபிஷேகம் செய்யத் தவருவதில்லை. அப்பா அச்சு ஒடு போட முடிவெடுத்திருந்தார். 2500 ரூபாய் பிடிக்கும் என்று பேஸிக்கொண்டிருந்தனர். PF லோன் போடணும். அம்மாவிடம் நடந்ததைக் சொல்லவில்லை. நித்தின் வீட்டிற்க்கு செல்வதுமில்லை.ஒரு வேளை இல்லாமையில் வந்தத் தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம்.

அம்மாவிடம் பொம்மை வேண்டுமென்று அடம் பிடித்தேன். 63 ரூபாய்க்கு ஒரு பொம்மை வாங்கித்தந்தாள். அவளுடைய அம்மாவிடம் அன்றிரவு சொல்லிக் கொண்டிருந்தாள். பாவம் பொம்மை வெண்டுமென்று ஆசையாய் கேட்கிறான். இவன் அப்பா வீட்டை சரி செய்ய இப்பொழுதுதான் லோன் போட்டிருக்கார். 2500 ரூபாய்க்கு பொம்மை வாங்கித்தரும் நிலைல நாங்க இல்லையேமா...குழந்தைக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்.
எனக்கு என்னமோ புரிந்தது. இனி யாரையும் எனக்கு மைல்கல்லாக வைத்து கொள்ளாக் கூடாதென முடிவு செய்தேன். எனக்கு நானே மேற்கோள். இன்று என்னிடம் ஒரு GIJOE இருக்கிறான். அடுத்த ஆண்டு மேலும் இரண்டு சேர்க்க வெண்டும். நானே காசு சேர்த்து வாங்க வெண்டும். அப்பாவை கேட்பதாய் இல்லை.

அப்பொழுது அந்த குணத்தின் அருமை தெரியவில்லை. பின்னாளில் ஒவ்வொரு தோல்வியிலும், ஒவ்வொரு தாமதத்திலும் நிம்மதியும் அடுத்த நடவடிக்கைக்கான வ்யூகமும் தெளிவாய் தெரிந்தது. அடுத்தவருக்குக் கிடைத்ததைக் கண்டு உள்ளம் குமுரிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
என் பாதை வேறு, என் பயணம் வேறு. அடுத்தவனின் தேவையும் இருப்பும் எனக்கு எந்த மட்டிலும் சம்மந்தமில்லாத ஒன்று.

பின் பங்குனி உத்திரத்தன்று கோவிலில் விற்கப்படும் சாணி பொம்மைத் தவிர எதையும் நாடியதில்லை. அப்பா எல்லாம் தந்தார். சிறந்த கல்வி, சிறந்த மருத்துவம், சிறந்த உணவு, சிறந்த உடைகள் என எல்லாம் தந்தார். எல்லாமே அவருடைய சக்தியை மீறித்தான் செய்தார். எல்லாவற்றையும் கடந்து என்னையும் Sriniயையும் அன்போடும் ஸந்தோஷத்தோடும் வளர்த்தார், இன்றும் வளர்த்து வருகிறார்.

எனக்கு என்ன வேண்டுமென்று எனக்குத் தெரியும். அதை அடுத்தவரின் விருப்பங்களோ வாழ்வியல் முறையோ முடிவு செய்வதில்லை. எல்லோரும் அப்படி இருக்கத் தேவையில்லை.

7 comments:

Srini said...

Absolutely.. But here in madras, I m a Gadget king.. thanks to u :)

Srini said...

Romba nalla iruku... you and srinivasa varadhan mattumdhan eppavum engaluku ellam....I am a lucky mother, to have children like u ..keep up good work...

~AMMA

Rags said...

Great Man...Really touching narration...Mami's comments Pullarichi pochu...
Trust me without our parents stretching beyond their limits, we would not be where we are today.

My dad always tells me, 35 yrs of Govt Service, No house, No Savings...Ne mattum thaan da enakku sothu(asset). He is very true.
As Children our only goal should be to give them the luxuries that they sacrificed for us then, back to them.

This is where lies the real meaning of Matha,Pitha, Guru and Deivam.
Petrorai Mathichavan Nasama Ponatha sarithrame kedayathu...

srikk said...

Gud one! Reminds me of a Jayagandhan short story "Bommai". avargal "Petror" illai.. Naam dhaan "Petror" . avargalai "tharuvor" endru dhan azhaikka vendum :)

Ityuty said...

Disappointment due to an (un)expected event lead to frustation. Then, some cho(o)se to push their limits to come over it and many cho(o)se to lower the expectations...either ways, satisfaction is important...And yeah, the sacrifice of our parents is the portrayal of love in its purest form, which cannot be matched by anything else...

Seshadri T A said...

Thanks Srini, Raghavan, Amma and Srikkanth~!

@ Jai

Mudavan kambu thenukku aasai pada koodathu nu naan sollala... aasai padalaam! Aaana antha aasai niraivera neraya uzhaippum neramum thevai padum.

Enudaya karuthum athu than... yaaro oruthar etho vechirukanga nu antha nilaiku enaala udane poga mudiyathu..

muthalil naan virumbum porul naane manamuvanthu virumbiyathu thana ilai etho oru veLi sakthiyaal untha pattatha nu yosikaren.. athayum thandi athu naan virumbiyathaga irunthal, athai adaivatharku vyoogam seigiren.

//இன்று என்னிடம் ஒரு GIJOE இருக்கிறான். அடுத்த ஆண்டு மேலும் இரண்டு சேர்க்க வெண்டும். நானே காசு சேர்த்து வாங்க வெண்டும். அப்பாவை கேட்பதாய் இல்லை.
//

intha varigal ithai thaan kurikindrathu...

Living a satisfied life doesn't mean incompetitiveness.

Thanks for a detailed comment :-)

Parthaa said...

Machan,good one da...tears drop from my eyes...