Saturday, February 21, 2009

உக்ரோதயம்

அத்தியாயம் 1
கிழக்கு கடற்கரை
கிழக்கு கடற்கரையின் பொன் மணற்பரப்பைப் பூரண சந்திரன் தனது வெள்ளிக் கிரணங்ளால் மிளிரச்செய்து கொண்டிருந்த மகோன்னதக் காட்சி கலையுணர்வென்பதே கிஞ்சித்தும் இல்லாத மூடனைக்கூட ஒரு கணம் கவிஞனனாய் மாற்றக் கூடியச் செழுமையை பெற்றிருந்தது! அடிவானில் முழுமதி உதயமான மருகணமே அவளின் கவின் கொஞ்சும் வதனத்தை தொட்டு விடலாம் என்ற இருமாப்பில் வழக்கத்தை விடவும் அதிகமாய் எழும்பி ஏமாற்றம் அடைந்த அலைகள் "ஓ!" என்ற இரைச்சலுடன் ஆற்பரித்து கொண்டிருந்தக் காட்சி மானிட வாழ்வின் எண்ண ஓட்டங்களை பல கோணங்கலில் பிரதிபலிப்பதாய் இருந்தது! சித்திரை மாதத்தின் தெளிந்த வான்வெளியில் மின்னிக் கொண்டிருந்த தாரகைகள் அந்தக் கடலலைகளைக் கண்டு நகைப்பதுப் போன்றேத் தோன்றிற்று! ஒருவேளை அவைகள் வெகு தொலைவில் இருந்ததனால் நமக்கு அந்தச் சிரிப்பொலி கேட்கவில்லை போலும்! இளவேனில் வெப்பத்துக்கு அருமருந்தாக அமைந்தது ஜில்லென்று வீசிக்கொண்டிருந்த சமுத்திரக் காற்று! கடற்கரைக்கு சற்று தொலைவில் இருந்த நெடிதுயர்ந்த சவுக்குத் தோப்புக்குள் ஊடுருவிச் சென்று அந்தக் காற்று கடலலைகளுக்கு போட்டியாக மற்றொரு ஓம்காரத்தை எழுப்பிக் கொண்டிருந்தது!

இந்த ஓவியக் காட்சியில் சிறுதும் லயிக்காது அந்த ஜனசஞ்சாரமற்ற இடத்தில் ஆழ்ந்த சிந்தனையில் மனதை நிலைக்க விட்டிருந்த அந்த இளைஞன் சொல்லவொண்ணா வேதனை அடைந்திருக்கிறான் என்பது அவன் முகத்தை பார்த்தால் ஐயமற விளங்கும். ஞாயிற்றின் ஒளியை தேக்கி வைத்திருந்த அந்த விழிகளை கூட ஏதோ ஒரு துன்பம் மேகம் போல் மூடி மங்கச் செய்திருந்த போதிலும் பார்வயில் தொனித்த கம்பீரம் சிறிதும் குறையாது, நெஞ்சுறுதியையும் நம்பிக்கையையும் எடுதுக்காட்டுவதாய் அமைந்திருந்தது.
இரவு நன்றாக ஏறிவிட்டதை அடுத்து மதுமதி உச்சி வானை அடைந்திருந்தாள். தொலைவில் தோப்புக்குள் ஊளையிடும் நரிகளும், மெதுவாய் ஸப்திக்காரம்பித்த ஸர்பங்களும் அந்த கடல் ப்ராந்தியததை ஆபத்தான களமாக அறிவிக்க முயற்ச்சி செய்துகொண்டிருந்தன! துணையின்றி அவ்விடம் நெடுநேரம் படுதிருந்த அந்த யொவன புருஷன் பெரும் ப்ராக்ரமசாலியாகத் தான் இருத்தல் வேண்டும். அச்சம் என்பதே எள்ளளவும் அறியாத குடியில் தோன்றியவனாய் இருத்தல் வேண்டும்!

காட்டாற்று வெள்ளம் போன்று உள்ளத்தில் பொங்கிய எண்ண அலைகளால் தனக்கு பின்னால் தன்னை ஓசையின்றி சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை கவனிக்கத் தவரியவன், மெல்ல எழுந்தமர்ந்து திரைக்கடலை நோக்கினான்!திடீரென்று ஏதோ அறியப்பெற்றவனாய் விடுக்கென்று எழுந்து சவுக்குத் தோப்பை நோக்கி நடக்கலானான். அவன் நடை போடத்தொடங்கிய மறுகணமே சவுக்குக் கிளைகள் பரபரப்படைந்தன. நரிகளின் ஓலத்தோடு மனிதர்களின் ஓசையும் மெல்லியக் காற்றில் கேட்க ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்த வாலிபனுக்கு மட்டும் எதுவுமே செவியில் ஏறவில்லை போலும். தனது நடையை துரிதப் படுத்தினான்.

இந்த ஒரு தனிமனிதனை அந்த நள்ளிறவில் என்ன ஆபத்து சூழ நேரிடும்? ஒருவேளை கொள்ளையர்களாய் இருக்கலாம்.ஆனால் கொள்ளையற்க்கு ஆபரணம் தரிக்காத ஆண்மகனிடம் என்ன வேலை? ஒரு வேளை கொலைகாரர்களாய் கூட இருக்கலாம். ஒரு அப்பாவி இளைஞனை அந்த நடுநிசியில் மறைவில் காத்திருந்து கொலை செய்வதில் அவசியம் என்ன இருக்கிறது?
ஆனால் அந்த இளைஞன் ஒரு சாதாரண ப்ரஜையாய் அல்லாமல், அஸ்வத்தாமன் வழி வந்த பல்லவ குலத் தோன்றலான அவனிசிம்மன் என்னும் பட்சத்தில் அந்த அவசியம் ஏற்படுகிறதல்லவா?

... தொடரும்


2 comments:

Harini Padmanabhan said...

yappa.. enna oru tamil manam

Seshadri T A said...

Kalki sandilyan kathu koduthathu than... puthusa onumilla.. kathaiyoda poku romba complex aah poguthu.. so yosikaren