சேஷு கடல் கடந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது. இந்த முறை அவன் விடுப்புக்கு வந்த போதும் என்னைக் காண வரவில்லை. மூன்று நான்கு முறை அலைபேஸியில் தொடர்பு கொண்டான் அவ்வளவுதான்.
"Ramu has lost trust in you... do you know that?" .. கேட்டது சேஷு
I have known this much before he did. நான் அமைதியாக இருந்தேன்...
அவனுக்கு ப்ரச்சனைனு தெரியுமில்ல... help பண்ணலாமே...கோபமாகக் கேட்டான் சேஷு...
நான் மீண்டும் அமைதியாக இருந்தேன்...
"நீ எப்படி இருக்க?" ... இது நான்...
"I am doing great as usual... எனக்கென்ன... " சடாரென்று வந்தது அவன் பதில்...
அவனிடம் எனக்கு பிடித்த ஒன்று...சில நேரம் அலுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் தனக்குக் கிட்டியதை வைத்து அமைதிப் பட்டுக் கொள்பவன்... வேறொருவரின் இருப்புகளைக் கண்டு பொறாமைக் கொள்ளாதவன். தன் வாழ்க்கை தன் பயணம் தனி என்பதை உணர்ந்து தன் இலக்குகளையும் இலக்கணங்களையும் வகுத்துக் கொள்பவன்..
அன்று எங்களுக்குத் தெரிந்த எல்லோரைப் பற்றியும் பேசினான்...
நான் சிலருக்கு உதவ முற்படவில்லை என்று குற்றம் சொன்னான்...
என் கவலை அவனுக்குத் தெரியாது..
அவனுடைய சில ப்ரச்சனைகளையும் பேசினான்...
வேலை பிடிக்கவில்லை என்பதுத் தொடங்கி, ஒரு பெண்ணைக் காதலிக்க முடியவில்லை என்பது வரை சின்ன சின்னப் புகார்கள். ஒரு நண்பனாக நான் என் கடமைத் தவரி விட்டதாகச் சொன்னான்.
பின் தானே அவைகளை பார்த்துக் கொள்வதாகவும்.. என் உதவி தேவை இல்லை என்றும் சொன்னான்..
"I have to seek favor from you... எல்லாம் என் விதி... " என்று நொந்துக் கொண்டான்...
"You guys lack the intelligence to differentiate between what's destiny and Freewill. That's your problem" என்றேன் நான்...
"I hate you ... " என்று இணைப்பைத் துண்டித்து விட்டான்...
"Get Lost! I have my priorities too... " என்று நானும் இருந்து விட்டேன்...
ஆனலும் மனசு கேட்கவில்லை... கொள்ளிடக்கரையின் குளிர் காற்றில் தூரத்து வெள்ளைக் கோபுரத்தை வெரித்து பார்த்தப் படி யோசித்துக் கொண்டே இதை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...
Monday, November 15, 2010
Subscribe to:
Posts (Atom)