Monday, March 29, 2010

நினைவலைகள்....

சரித்திரத்திற்கும் சாமான்யத்துக்கும் நடுவே தன்னிலை அறியாமல் சிக்கித் தவித்துக்கொண்டிருப்போர் பட்டியலில் நானும் இணைந்து ஒரு சில ஆண்டுகள் ஆகி விட்டது. ஒளியை விடவும் அதிவேகமாக ப்ராயணப் படும் திறன் கொண்டது எண்ணங்கள். முப்பதாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஞ்சியில் 8 வயதே ஆன என்னை என் வீட்டு திண்ணையில் மீண்டும் சந்திப்பதற்கு ஒரு மாத்திரை நேரம் கூட பிடிப்பதில்லை.

வரதராஜா டூரிங் டாக்கிஸில் "மருதமலை மாமணியே முருகைய்யா" பாடலுடன் தொடங்குகிறது எனது பின்மாலைப் பொழுது. கண்ணதாஸனும் வாலியும் தொடர்ந்து சிந்தையை கட்டிவைக்க, தாத்தாவின் மடியில் படுத்துக்கொண்டு கதைகள் கேட்டுக் கொண்டே தூங்கிப்போகிறேன். எனக்கு கவிதை வரிகள் மீது ஆர்வமேற்பட காரணமாயிருந்த பொன்மாலைப் பொழுதுகள் அவை.

கரடி மாமா, ஜடப்பளூரார், ராமு மாமா, கோபு தாத்தா என யாரவது ஒருவர் தாத்தாவைப் பார்க்க வர, ஊர் அரசியல் அனைத்தும் அத்துப்படி ஆகிப் போயிருந்தது. விவித் பாரதியின் வர்த்தக ஒளிபரப்பும், உலா வரும் ஒளிக்கதிர், ஒளியும் ஒலியும், எதிரொலி முதலான தொலைக்காட்சி நிகழ்வுகளும் தான் என் சின்னஞ்சிறு உலகத்தின் வாசல்.

ஷோபனா ரவி, அன்பழகன், சந்தியா ராஜகோபாலன், இவர்களில் யார் அன்றைய செய்தியை வாஸிக்கப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரியப் போட்டி. படிப்பில் என்றுமே முதன்மை இடம். ஆதலால் அது பற்றிக் கவலைக் கொண்டதே இல்லை.

இப்பொழுது முக்காலும் யெந்திரமாகி விட்ட ஊரில் குழந்தைகள் விரும்பி திரும்பிப் பார்க்க ஒரு சில நினைவுகளேனும் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.... தொடர்வேன்....

4 comments:

Ityuty said...
This comment has been removed by the author.
Ityuty said...

Nice and interesting...looking forward for the continuation...as i said earlier, your command over tamil language and choice of words are really good...i am able to visualize with your words...by the way, i don't think it is 30,000 miles...

Srini said...

seshu the great.very nice.unnudaya thiramaiai padithu r0mba acaryaMA IRUKU.goodwork.continue pannu. appadiyae unnai ettu vayathu kuzhandaiyai ennal ippavum unara mudigirathu.no exaggeration in your work or in my comment.

Amma

Pavithra Srikkanth said...

anna very nice story.ungaluku ivlo nalla thiramaya.idhu continue aagatum and i wish u to write so many stories like this.Its realistic.